பிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் – ராம்தாஸ் அத்வாலே

1240

பிரதமர் மோடியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும், தமிழகத்தில் புதிய கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரனும் ஆதரவு தரவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகொள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பயணியர் ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி அரசின் திட்டங்களான ஜி.எஸ்.டி., முத்ரா கடன், ஜன்தன் யோஜனா, அஞ்சலக வங்கி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், பல திட்டங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களிடம் அதிகமாக சென்றடைந்து ஒரு சிறந்த ஆட்சியை மோடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்றும் அதற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சி துவங்கிய டிடிவி தினகரனும் ஆதரவு தர வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement