அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இந்தியா வானிலை ஆய்வு மையத்தில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றார்.
பேரிடர் மீட்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக பேசினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் இளவரசர் சார்லஸ் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு 10வது முறையாக வரும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நாளை தனது 71வது பிறந்த தினத்தை இந்தியாவில் கொண்டாட உள்ளார். இதைத்தொடர்ந்து, நிலையான வணிகம் தொடர்பாக இந்திய தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.