புழல் மத்திய சிறையில் 4-வது முறையாக சோதனை – செல்போன்கள் பறிமுதல்

928

புழல் மத்திய சிறையில் 4-வது முறையாக சிறப்பு சோதனை குழுவினர் நடத்திய சோதனையில் கொலைக் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை புழல் மத்திய சிறை யில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே புழல் சிறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடந்த வார இறுதியில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டது.

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்கை புகைப்படம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 2 தலைமை வார்டன்கள் மற்றும் 6 முதல்நிலை வார்டன்கள் உட்பட 8 பேரை அதிரடி இடமாற்றம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது.

மேலும் 9 வார்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று மீண்டும் புழல் சிறையில் சிறப்பு சோதனைக்குழுவினர் 4-வது நாளாக சோதனை நடத்தினர்.

சோதனையில், கொலை வழக்கில் ஆய்ள் தண்டனை அனுபவித்து வரும் ஐயப்பன், குணசேகரன் ஆகிய இருவரிடம் இருந்து 4 சல்போன்கள், சிம்கார்டுகள், மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement