கைதிகளிடையே மோதல்..! உயிரிழந்த 36 பேர்..! சிறைச்சாலையில் பரபரப்பு..!

560

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் உயிரிழந்தனர்.

ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகரான டெகுசிகல்பா-வில் உள்ள 27 சிறைச்சாலைகளில், சுமார் 22 ஆயிரம் கைதிகள் உள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக, தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அங்கு அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில், டெகுசிகல்பா அருகே உள்ள எல்-பொர்வெனிர் என்ற சிறைச்சாலையில்,
கடந்த 20 ஆம் தேதி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலைக்குள் கலவரம் ஏற்பட்டது. அதில் மீண்டும் 18 பலியாகினர். மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.