சிறைக் கைதிகளின் பிரியாணி காம்போ! ஆன்லைனில் அலைமோதும் மக்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்..?

539

கேரளாவின் வையூர் மத்திய சிறைச்சாலையில், கைதிகளை நல்வழிப்படுத்த சிறை நிர்வாகிகள் இணைந்து ஒரு முடிவினை மேற்கொண்டு, கைதிகளை சமைக்க வைத்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த சிறையில் கைதிகளே நாள்தோறும், சமைத்து வந்துள்ளனர். கைதிகள் அதிகப்படியான உணவுகள் சமைக்கும் போது, மிச்சமுள்ள உணவுகளை விற்று வந்துள்ளனர்.

இந்த உணவுப்பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதனை மெருகேற்றும் விதமாக ஆன்லைனில் உணவுப்பொருட்களை விற்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தையடுத்து, கைதிகள் பிரியானி காம்போ என்ற போக்கேஜை ரூபாய் 127-க்கு விற்க முடிவு செய்தனர். அந்த பேக்கேஜில்,

1. 300 கிராம் பிரியாணி

2. சிக்கன் லெக் பீஸ்

3. 3 சப்பாத்திகள்

4. ஒரு கப் கேக்

5. சாலர்

6. ஊறுகாய்

7. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்

ஆகியவை வழங்கப்படுகின்றன. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை வகைகளா? என கேரள மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர்.

இந்த வரவேற்பை கண்டு சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவிற்கு, பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement