திங்கள் கிழமை முதல் உயரும் பால் விலை..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

710

தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில் புதிய ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாக அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் நாளை மறுநாள் முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன.

பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்கிறது. தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

தனியார் பால் விலை திடீரென உயருவதால் அதனை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தனியார் பால் விலை உயர்வதால் ஏழை-எளிய குடும்பங்களில் கூடுதல் செலவினத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.