11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை.

863

இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சில தனியார் சுயநிதி பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படாத நிலை இருப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், 11ஆம் வகுப்பின் அனைத்துப் பாடங்களும் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்பித்தல் தரம் குறைவு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

Advertisement