தண்ணீர் லாரி உரிமையாளர்களின் அறிவிப்பு..? அதிர்ச்சியில் தமிழகம்!

641

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் மாநில தலைவர் நிஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிஜலிங்கம், தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைப்பிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனியார் லாரிகள் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், தங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என கூறினார். எனவே நாளை முதல் தண்ணீர் எடுக்கப்போவதில்லை என்று மறைமுகமாக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of