அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் – பிரியா ஆனந்த் ஓபன் டாக்

686

வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த். அதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களின் மூலம் தன்னை திரையுலகில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார்.ஆனால், சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்துள்ள நலையில். சில நாட்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நான் இன்னும் இருக்கின்றேன் என்பதை தெரிவித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திறத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,

“நான் வெளிநாட்டில் வளர்ந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் என்பதில் எந்த விதமாற்றமும் இல்லை.

எனக்கு சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஒரு ஹீரோ எனக்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு நிகழவில்லை. எனக்கு காட்பாதர் மாதிரி யாரும் இல்லை.

சொல்லப்போனால் சினிமாவுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. ‌ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன்.

‌ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of