விஜயுடன் கைகோர்த்து ஆக்‌ஷனில் இறங்கும் பிரியா பவானி | Mafia

481

சினிம உலகிற்கு `மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து இவர் நடிப்பில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளாராம். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.