80-வயது பாட்டியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..? யார் தெரியுமா ஹீரோ..?

4936

பிரபல செய்தித்தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மட்டும் நடித்துவிட்டு, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

நடிகர் வைவ் மற்றும் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினமாவில் அறிமுகமாகிய இவர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அந்த திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்தியன் 1 படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு ஜோடியாக வரும் கதாபாத்திரத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Advertisement