சீட்டு மறுப்பு.., கண்ணீர் விட்டு அழுத பாஜக எம்.பி

479

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது எம்.பி களாக உள்ள பலருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 68 இடங்களை பாஜக கைப்பற்றியது. மேலும், முந்தய எம்.பி களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் தனது ஆதராவாளர்களின் கோஷத்தால் உத்தரபிரதேச பாஜக எம்.பி பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of