ஆடைகளை கழற்ற சொன்ன இயக்குநர்.. பிரியங்கா சோப்ரா கொடுத்த அதிர்ச்சி..

2321

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது வாழ்க்கை கதையை, அன்பினிஸ்டு மெமோயார் என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் குறித்து எழுதியுள்ள அவர், இயக்குநர் ஒருவர் தனது மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் எனக் கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சல்மான் கான் படமொன்றில் பாடலுக்கு நடனமாடியபோது, ஆடைகள் ஒவ்வொன்றையும் கழட்ட வேண்டும் என்றும், உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றும் இயக்குநர் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, அடுத்த நாளே அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement