கணவரை கண் கலங்கவைத்த பிரியங்கா சோப்ரா | Nick Jonas | Priyanka Chopra

391

“தி ஸ்கை ஐஸ் பிங்க்” நோய் எதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றிய கதை வாழ்கை வரலாறு குறித்த இந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல கோலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர் நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார் என்று கூறியுள்ளார்.

‘திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர்.

படப்பிடிப்பின் போது நான் தீவிரமாக ஒரு காட்சியில் நடித்து கொண்டிருந்தேன் அப்போது மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள் உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்தார்’ என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of