7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை மட்டும் கேட்காதீங்க..!

1030

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது கவனம் ஹாலிவுட் பக்கம் உள்ளது.

இதற்கிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. எனவே பெரும்பாலும் அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார்.

புதிய வீடு
இன்னும் சில வாரங்களில் இந்தத் தம்பதி தங்களது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரமாண்ட வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளார்.

20 மில்லியன் டாலர்
20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு ரூ.144 கோடி ஆகும். இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள் உள்ளன.

சகல வசதிகள்

அதோடு வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரண்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் என சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடம்பர கார் பரிசு

பிரியங்கா சோப்ராவைத் திருமணம் செய்த போது, நிக் 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். தற்போது அந்த வீட்டை 6.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்றுவிட்டார்.

அதற்குப் பதில் பிரியங்கா சோப்ரா இந்த வீட்டை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.