வீட்டை விற்ற ப்ரியங்கா..! – வாயை பிளக்க வைத்த அதிரடி மூவ்..! எதற்கு தெரியுமா?

786

பிரபல ஹிந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகரான ஜோனஸை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவை விட ஜோனஸ் வயதில் இளையவர் என்பதால் அந்தத் திருமணம் உறுதியான நாளிலிருந்தே இருவரும் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டனர்.

திருமணம் முடிந்த பின்னும் மீடியாக்களுக்கு அடிக்கடி பலவிதமான செய்திகளைத் தருபவர்களாக அந்த ஜோடி இருக்கிறது.

தற்போது அவர்களைப் பற்றி வந்துள்ள செய்து அவர்களுடைய வீட்டைப் பற்றியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவர்களது வீட்டை 48 கோடிக்கு விற்றுவிட்டார்களாம்.

அடுத்து 141 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை அவர்கள் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தன்னைவிட வயது குறைந்தவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் ராஜவாழ்க்கை வாழத்தான் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.