மோடிக்கு ஆதரவாக கோசமிட்ட ஆதரவாளர்கள்.., கைகுலுக்கி நெகிழ வைத்த பிரியங்கா

328

அனல் பறக்கும் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை நெறுக்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்னும் ஒரே ஒருகட்ட தேர்தல் மட்டுமே உள்ளது. அதற்காக தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய பிரதேசத்துக்கு முதல் முறையாக பிரியங்கா காந்தி வந்தார்.

இந்தூர் அருகே ராஜ் மோஹல்லாவிலிருந்து சாலை பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார். பின்னர் மற்றொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு இடத்தில் சிலர் ஒன்று கூடி ‘மோடி, மோடி’ என பிரியங்காவை வெறுப்பேற்ற கோஷம் எழுப்பினர். இதையடுத்து தனது வாகனத்தை உடனடியாக நிறுத்திய பிரியங்கா காந்தி.

உடனே காரை விட்டு இறங்கி கோஷம் மிட்டவர்களிடம் கைகளை குலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள். நான் என் வழியில் பயணிக்கிறேன் என கூறிவிட்டு சென்றார். இதனால் பாஜக ஆதரவாளர்கள் அதிரச்சியுடன் கூடிய, மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of