வாரணாசியில் நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்.., பிரியங்கா காந்தி

656

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதனால் பிரியங்கா போட்டியிடுவார் என பணியாற்றிய அத்தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இப்போது வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடாதது தொடர்பாக பிரியங்கா காந்தி பதில் கூறியுள்ளார்.

நான் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தினால் உ.பி.யில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் அதிருப்தி அடைவார்கள் என கூறியுள்ளார்.

“உ.பி.யில் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டேன். இங்குள்ள 41 தொகுதிகளுக்கும் நான் பொறுப்பாக வேண்டும் என்று உறுதியாக கூறினேன். எனவே நான் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் அவர்கள் (41 வேட்பாளர்கள்) அதிருப்தி அடைவார்கள் என நினைத்தேன்,” என பிரியங்கா விளக்கம் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of