“பிரியு அது புடலங்கா இல்ல பாம்பு!” பாம்புடன் விளையாடும் பிரியங்காவின் மாஸ் வீடியோ!

776

ரேபரேலியில் போட்டியிடும், தனது தாய் சோனியா காந்திகாக, உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5-ம் கட்டமாக வருகிற 6 மேதி உத்தரபிரதேச மாநிலம் தவுராஹ்ரா, சித்தாபூர், மோகன்லல்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, பைசாபாத், பஹ்ராய்ச், கைசர்கன்ஜ், உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, ரேபரேலி தொகுதியில் இன்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரியங்கா காந்தி, பாம்பாட்டிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, படமெடுத்து ஆடிய பாம்புகளை அசால்ட்டாக கையில் தூக்கி விளையாடும் அந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாய் தைத்த பாம்பாக இருந்தாலும், பிரியங்கா காந்தி சற்றும் பயமில்லாமல் இருந்தது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது.

newest oldest most voted
Notify of
Giri V S
Guest
Giri V S

இவர்கள் மோடியைச் சொல்கிறார்கள். இவர்கள் காட்டுவதுதான் மோடி மஸ்தான் வித்தை.