ராகுல் விட்டுக்கொடுத்தால் போட்டியிட தயார்! டுவிஸ்ட் கொடுத்த பிரியங்கா காந்தி!

565

லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதியை உள்ளடக்கிய கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலராக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பணியாற்றி வருகிறார்.

அமேதி, வயநாடு இரண்டிலும் ராகுல் வெற்றி பெற்றால் ஏதேனும் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அமேதி தொகுதியை ராகுல் காந்தி விட்டுக் கொடுத்தால் போட்டியிட தயாரா? என்று பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, அமேதியில் போட்டியிடுவது ஒன்றும் சவாலானது அல்ல. என்னுடைய சகோதரர் ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும். அவர் அமேதியை விட்டுக் கொடுக்க முன்வந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட நானும் தயார் எனக் கூறியுள்ளார்.

அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளை இந்திரா காலம் முதல் அவரது குடும்பத்தினர் தக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.