எங்கள் தந்தை பலியானதற்கு இதுவே காரணம்! – பிரியங்கா!!

553

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அமித் குமார் கோரி என்ற வீரரின் நினைவாக இன்று அவரது இல்லத்தில் பிரார்த்தனையுடன் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

priyanka.jpg-2
இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் மாநில பொதுச்செயலாளர்கள் பிரியங்கா வதேரா, ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, அவர்களிடம் பேசிய பிரியங்கா, தங்கள் தந்தையும் பயங்கரவாதத்திற்கு பலியானதால் உங்கள் துயரத்தையும் வேதனையையும் எங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.