பிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி!

942

ராஜா படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் ப்ரியங்கா த்ரிவேதி. காதல் சடுகுடு படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார்.

கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் ஜனனம்.

இந்நிலையில் மகத் ராகவேந்திரா, யாஷிகா நடிக்கும் த்ரில்லர் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார் அவர்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கடந்த வாரம் வந்தது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த படம் சுவாரஸ்யமாக உள்ளது. இது தமிழ்-கன்னட மொழிகளில் வெளியாவதால் நான் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளேன். நான் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் மகிழ்ச்சி.”

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of