புரோ கபடி லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள 6வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கொச்சியில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், குஜராத் – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி முடிவில் குஜராத் அணி ஒரு புள்ளி முன்னிலை பெற்றிருந்தது. இதைதொடர்ந்து இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தது. இறுதியில் 41 – 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2வது தகுதி சுற்றில் விளையாட உள்ளதால், இறுதி போட்டிக்கு முன்னேற மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of