இறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi

284

புரோ கபடி லீக் தொடரின் ஆட்டங்கள் கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் பல நகரங்களில் நடந்து வருகின்றது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி குஜராத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தனர். இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.