புரோ கபடி ! ஆறாவது வெற்றியை பெற்ற புனேரி பால்டன் | Pro Kabadi

1047

புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு புனேவில் நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே புனே வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதன் விளைவாக புனே அணி முதல் பாதியின் முடிவில் 20 – 15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் புனே அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் பெங்களூரு அணியினரின் ஆட்டம் சிறந்ததாக அமையவில்லை. ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு புல்ஸ் அணியை 42 -38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய புனேரி பால்டன் அணி தனது ஆறாவது வெற்றியை பெற்றது.