பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்த “யு மும்பா” | Pro Kabadi

453

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் புரோ கபடி போட்டியின் 7-வது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தங்களது ஆட்டத்தை மிக நேர்த்தியுடனும் பொறுப்புடனும் விளையாடினர். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 15- 15 என சமனிலை வகித்தன.

ஆனால், இரண்டாவது பாதியில் யு மும்பா அணியினர் அதிரடியாக ஆடினர். இறுதியில், யு மும்பா அணி 41 – 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.