புரோ கபடி – இரண்டாவது வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ்

910

7-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் – ஜோகீந்தர்சிங் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை வென்றது. இந்த சீசனில் வீரர்களின் மாற்றம் அந்த அணிக்கு முதல் ஆட்டத்தில் நல்ல பலனை கொடுத்துள்ளது.

கேப்டன் அஜய்தாகூர், ராகுல்சவுத்ரி, சபீர்பாபு, மஞ்சித்சில்லர், ரான்சிங், மோகித்சில்லர் போன்ற சிறந்த வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர், ஆகையால் அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் சாதித்து 2-வது வெற்றியைப் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement