தேவாங்கர் கல்லூரியில் மீண்டும் பிரச்சனை – கல்லூரி நிர்வாகிகள் இடையே மோதல்

749

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி நிர்வாகிகளின் பிரச்சனை தொடர்பாக. விசாரணை நடத்த வந்த, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முன், நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தேவாங்கர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி 3 பெண் ஊழியர்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினர்.

இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அம்பலவாணன் தேவாங்கர் கல்லூரிக்கு வருகை தந்தார்.

அப்போது ஏற்கனவே செயலாளராக இருந்த சவுண்டையன் தரப்பினரும், தற்போது செயலாளராக உள்ள ராமசாமி தரப்பினரும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement