“வீட்டின் ஒரு பாதி கள்ளக்குறிச்சி.. மறு பாதி விழுப்புரம்..” எல்லை பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட சிக்கல்..!

731

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தின் எல்லைகள் பிரிக்கப்பட்டதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் உள்ள இரண்டு வீதிகள், இரண்டு மாவட்டத்தின் பகுதிகளாக இருப்பதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில், ஒரு வீட்டின் முன் பகுதி கள்ளக்குறிச்சியிலும், பின் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளது.

மேலும், அண்ணனின் வீடு ஒரு மாவட்டத்திலும், தம்பியின் வீடு மற்றொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of