காவல்துறையின் தலையீட்டால் தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது

613

பெரும்பாலான விவகாரங்களில் காவல்துறையின் தலையீட்டால் தான் பிரச்சனைகள் ஏற்படுவதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்

அம்மா மக்கள் கல்வி முன்னேற்றக கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக மக்கள் இயல்பாகவே சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் பல விவகாரங்களில் காவல்துறையினர் தலையிட்டு பிரச்சனையை உருவாக்குவதாக கூறினார். ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Advertisement