“ஐயயோ இவ்வளவு பிரச்சனைகளா..,?” குழந்தைகளுக்கு செல்போனில் வீடியோ காட்டாதீங்க..! சிறப்புத் தொகுப்பு..,!

1876

விஞ்ஞாணிகள் கண்டுப்பிடித்த உலகின் மாபெரும் கண்டுபிடிப்பானது செல்போன். உலகின் எந்த மூலையில் எது நடந்தாளும், உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு இணங்க, இந்த செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால பல பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தற்போதுள்ள முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அதிகப்படியானோர் செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துகின்றனர். தற்போது குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சகைள் குறித்து தற்போது பார்க்கலாம்..,

1. குழந்தைகள் நீண்டநேரம் வீடியோவில் நேரத்தை செலவிடுவதால் வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் சரியாக பழக மாட்டார்கள்.

2. குழந்தைகள் வீடியோ பார்ப்பதால், கற்றல் திறனும் குறைகிறது.

3. எப்பொழுதுமே குனிந்துகொண்டு வீடியோ பார்ப்பதால் விரைவில் கழுத்துவலி ஏற்படும்.

4. குழந்தை வயதிலேயே வீடியோ பார்ப்பதால், வயதானபிறகு தண்டுவடம் பாதிக்கப்படும்.

5. இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகள் பேசுவதற்கு ரொம்ப தாமதம் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலில் வீடியோ பார்ப்பது தான்.

6. இந்த பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு, குழந்தைகளிடம் அதிகமான நேரங்களை செலவிடுங்கள். உங்களிடம் இருந்து தான் குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள்.

எனவே, தேவையான நேரத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்துவிட்டு, மற்ற நேரங்களில் குழந்தைகளிடம் செலவிடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

Advertisement