“கவின் இப்படிப்பட்டவரா..,?” ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்.,! கோபத்தில் நெட்டிசன்கள்..,!

1025

கடந்த மாதம் தொடங்கிய பிக்-பாஸ் நிகழ்ச்சி தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும், ஒவ்வொரு வாரமும், புதுபுது பிரச்சனைகளையும், அதிர்ச்சிகளையும் அளித்து வருகின்றனர்.

மேலும், பிக்-பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் இணையதள ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, சில தகவல்களின் மூலம் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கவினுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்றும், அது எனக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதை நான் தற்போது சொல்ல மாட்டேன், அவரே சொல்வார்., சொல்லட்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கவின், பிக்-பாஸ் வீட்டில் நிறைய பெண்களிடம் பேசி பழகி வருகிறார் என்று நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வரும் நிலையில், இவரின் இந்த பேட்டியால், கவின் மீது உச்சபட்ச கோபத்தில் அவர்கள் இருந்து வருகின்றனர்.

Advertisement