விஷால் பணத்தை திருடுகிறார்! பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!!

399

கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3தேதிகளில் நடத்தப்பட்ட ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தயாரிப்பாளர் கே.ராஜன்,

“பாராட்டு விழா என்றால் மரியாதை செய்து ஒரு விருது வழங்கலாமே தவிர, மூன்றரை கோடி ரூபாய் அதற்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தயாரிப்பாளர்கள் செலவழித்த பணத்தில்தான் அவர் ட்யூன் போட்டார், இசையமைத்தார், பெயர் எடுத்தார், பல கோடிகள் சம்பாதித்தார்.

அப்படிப்பட்ட ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கிவிட்டு, அவருக்குப் பாராட்டு விழா நடத்திக் கொண்டது உலக மகா அதிசயம். எத்தனையோ பரிதாபப்பட்ட தயாரிப்பாளர்களின் பணம் இது.

அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை விஷால் செய்திருக்கிறார். எத்தனை கோடி சொத்து இருந்தாலும் அடுத்தவன் காசில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்.

அந்தத் திருட்டைத்தான் தயாரிப்பாளர் விஷயத்தில் விஷால் தொடர்ந்து செய்து வருகிறார் ”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement