வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் கூறிய தகவல்..! ரசிகர்கள் நிம்மதி..!

1574

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்த படம் கைவிடப்பட்டதாக, தானு பெயரில் டுவீட் ஒன்று பதிவிடப்பட்டது.

இதனால், ரசிகர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் இருந்தனர். அதன்பிறகே, அது போலிக்கணக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கலைப்புலி எஸ்.தானு, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள்.

வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

மேலும், எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ வலம் வரும் வாகை சூடும் என பதிவிட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினார். இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement