பிகில் லாபம்னு யார் சொன்னாங்க..? போட்டுத்தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

422

கடந்த மாதம் 25-ஆம் தேதி அன்று இயக்குநர் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

ஆனால் இந்த படத்தின் வசூல் விவரங்கள் மட்டும் தெரியாமலே இருந்தது. திடீரென பிகில் திரைப்படம், 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று தகவல் தீயாய் பரவ ஆரம்பித்தது.

இந்த தகவலை கேட்டு விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் ராஜன் யூடுயூப் தளத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், பிகில் படம் பெரும் வெற்றி, வசூல் வேட்டை, 200 கோடி வசூல் என்றெல்லாம் பலர் பரப்பிவருகின்றனர்.

அப்படியெல்லாம் பெரிய வெற்றி ஒன்றும் இல்லை, ஐந்தாவது நாளே படுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். முதல் இரண்டு நாள் நன்றாக வசூல் ஆனது, நாட்கள் செல்ல செல்ல வசூல் குறைந்து, ஐந்தாவது நாள் படுத்துவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், 2019-ஆம் ஆண்டில், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், பேட்ட ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூல் பெற்றது என்றும், தற்போது கைதியும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கும் சரி, சினிமா வட்டாரத்திலும் சரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.