மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை – ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

680

ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை அவரிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மது குடிக்கும் வழக்கத்தை குறைக்க ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார்.

Advertisement