தமிழகத்தில் 43 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

213

தமிழகத்தில் காலியாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தற்சமயம் தமிழகத்தில் காலியாக உள்ள 3 டிஜிபி பணியிடங்களை நிரப்புவதற்காகவும் தமிழக அரசு அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல், 3 ஏடிஜிபி, 9 ஐஜி, 14 டிஐஜிஆகிய பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக உள்துறைக்கு அனுப்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் நேற்று பதவி உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் பதவி உயர்வு பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of