பிகில் பர்ஸ்ட் லுக்..! போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..! காரணம் தெரியுமா..?

523

இயக்குநர் அட்லீயுடன் விஜய் 3-வது முறையாக இணையும் படம் பிகில். நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், இந்துஜா ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் இரண்டு கேரக்டரில் இருப்பார். கல்பந்து விளையாட்டு வீரர் போல் உடையணிந்துக்கொண்டு, கால்பந்தை தூக்கிப்போட்டுக்கொண்டு ஒரு கேரக்டரும், பக்க லோக்கல் கேரக்டரில் மாசாக இன்னொரு கேரக்டரும் இருக்கும்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை கண்ட கோவை இறைச்சி வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அப்பா வேடத்தில் இருக்கும் விஜய், இறைச்சியை வெட்டும் கட்டையின் மீது செருப்போடு கால் வைத்திருக்கிறார்.

நாங்கள் தெய்வமாக நினைக்கும் அந்த கட்டையின் மீது விஜய் காலணியுடன் கால் வைப்பதா என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Lourdhu Robin Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Lourdhu Robin
Guest

Yaar Sir ivanga ellam
enga irunthu vaaranga?