குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்..!

921

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாமில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், மேற்கு வங்கம், டெல்லியிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தினர்.

ஹவுரா அருகே ரயில் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், பெல்டங்கா காவல் நிலையத்திற்கும் தீ வைத்தனர். இதேபோன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்

Advertisement