மதுரையில் ரயில் மரியல், 150 பேர் கைது

195

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று தேவரின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பல போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தேவரின தேச பக்த முன்னணி மற்றும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி பல்வேறு தேவரின அமைப்புகளைச் சேர்ந்த மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், கதிரவன், திருமாறன், முருகன் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தேவரின அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியலுக்கு முயன்ற 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of