தமிழக அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

457

தமிழக அரசை கண்டித்து வரும் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம், காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்,

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து, 10ஆம் தேதி நடைபெறும் “பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்போம், குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வரும் 18ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.