தி.மு.வு.க்கு எதிராக வரும் 25 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்

426

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்,அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டததில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கு தி.மு.க, காங்கிரசே காரணம் என்றும், இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த உதவிகளை ராஜபக்சே வாக்குமூலமாக தந்துள்ளார் எனவும் கூறினர்.

இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர்க் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க, காங்கிரஸை தண்டிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தி.மு.க.வுக்கு எதிராக வரும் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of