பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

331

இஸ்ரோ தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு  விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ‘எக்ஸ் எல்’ வகையில் 21-வது ராக்கெட் என்பதுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of