Pubg விளையாடுவீங்களா..? உங்களுக்கான தகவல்..! மத்திய அரசு அதிரடி முடிவு..!

519

இந்தியாவின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் மீது, சீன நாட்டை சேர்ந்தவ ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரும், சீனாவின் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஷேர் இட், டிக்-டாக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டுமொரு அதிரடி முடிவை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அதாவது, பப்ஜி, Ludo world-Ludo superstar உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

pubg

பப்ஜி விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு அடிமையாகி இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அந்த விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட மற்ற செயலிகளின் விவரம் பின்வருமாறு:-