பப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..

2179

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் ஆசாரிபொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் பாபிஷா. 20 வயதாகும் இவர், முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

வீட்டில் இருந்த பாபிஷா, செல்போனில் அடிக்கடி பப்ஜி விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அப்போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அஜின் பிரின்ஸ் என்ற நபருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி பப்ஜி விளையாடி வந்ததில், காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி அன்று, வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா, பிரின்ஸுடன் தலைமறைவானார்.

இதையடுத்து, மகளை காணவில்லை என்று பாபிஷாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாபிஷாவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், காதல் ஜோடியினர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர், காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரும் மேஜராக இருந்ததால், போலீசார் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து, அவர்களை அனுப்பி வைத்தனர்.