தபால் வாக்குரிமை நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

275

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு, தபால் வாக்குரிமை நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், அந்தந்த ஊராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தபால் வாக்கிற்கு உரிமை கோரினர்.

ஆனால், தபால் வாக்கிற்கு படிவம் பெறுவதற்கான கடைசி நாள் முடிந்து விட்டதாக கூறி, தேர்தல் அலுவலர்கள் நிராகரித்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of