“ரொம்ப போதை.. ஆபாசமாக பேச்சு வேற..” காவலரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..! வைரல் வீடியோ..!

673

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் பாண்டியராஜன்.

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இவர், காமாட்சிபுரம் என்ற இடத்தில் சாலையில் சென்றவர் மீது மோதியுள்ளார்.

அப்போது காவலருக்கும், வாகனம் மோதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் தடுக்க முயன்றபோது, போதையின் உச்சத்தில் இருந்த காவலர், பாண்டியராஜன் பொதுமக்களை தகார வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காவலர் பாண்டியராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு காவலர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாண்டியராஜனை அழைத்து சென்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of