“விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்..,” முதல்வர் எடுத்த அதிரடி முடிவு..!

424

புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 8,425 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

அந்த பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதில், தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என்றும், தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் உட்பட பல்வேறு விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு அசத்தலான திட்டங்கள் இருப்பதாக அந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மதுபான விலையை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement