“அவர் வேடிக்கை பார்க்கிறார்..” கிரண்பேடி சண்டையில் மோடியை இழுத்துவிட்ட நாராயணசாமி..!

322

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அராஜகத்தை, பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக – புதுச்சேரி அரசுகளின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்றும், இதில் 2 மாநில அரசுகளையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அராஜகத்தை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என குற்றம்சாட்டினார்.