கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

2093

காற்றின் மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுவை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை (02.12.2019) விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுவதும் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of